Friday, 24 July 2015

உலக_நிகழ்வுகள்‬



--------------------------
உலக_நிகழ்வுகள்‬:
--------------------------
1. ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் கென்னடி பதால்கா விண்வெளியில் அதிக நாட்கள் இருந்து சாதனை படைத்துள்ளார். இப்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக உள்ள அவர், இதுவரை 803 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

2. இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு அமெரிக்க அதிபர் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் இல்லினயிஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி அமெரிக்க கணித ஆசிரியர் தர்ஷன் ஜெயின், இவருக்கு அந்நாட்டின் எஸ்.டி.இ.எம். என்ற அமைப்பு சார்பில் அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அதிபரின் உயரிய விருது வழங்கி கவுரவித்தது.

3. கியூபா நாட்டில் 1961-ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. கடந்த ஆண்டு கியூபா அதிபர் ராவூல் காஸ்ட்ரோ, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார். பின்னர் கியூபா ஹவானா தூதரகத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

TNPSC- நிகழ்வுகள்-2015







சில முக்கிய நிகழ்வுகள் 2015 PART 1 : 
-------------------------------------------------------------

1.18வது E-governance மாநாடு காந்திநகர்(குஜராத்) நடைபெற்றது.
2.ஜம்மு காஷ்மீர் வெள்ள சேத நிவாரணமாக மத்திய அரசு 1102 கோடி வழங்கியது.
3.இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக Paulvan ass(டச்சு நாடு) நியமனம்.
4.இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஜே ஸ்ரீ பவன் நியமனம்.
5.கிராம கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்ய ஆர்.காந்தி தலைமையில் குழு நியமனம்.
6.இந்தியாவில் முதல் மாவட்டமாக கேரளாவின் இடுக்கி முழுமையான அகன்ற அலைவரிசை தொடர்பை ஏற்படுத்தி உள்ளது.
7. இந்தியாவில் முதன் முதலாக Gas மூலமாக ரேவேரி-ரோக்பாக் இடையே ரயில் சேவை இயக்கப்பட்டது.
8. ஆந்திராவின் சுகாதார தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்.
9.பீகார் அரசு கர்ப்பிணி கால விடுமுறையை 135லிருந்து 180 நாட்களாக உயர்த்தியது.
10.மஹாராஷ்ட்ரா அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கியுள்ளது.
11.ICICI வங்கி இந்தியாவில் முதல் முறையாக மொபைல் டிஜிட்டல் வங்கி தொடங்கியுள்ளது.
12.உத்ரகாண்ட் மாநிலம் சுற்றுலாவை ஊக்குவிக்க Himalayan dharshan programme என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
13.ஹரியானா மாநிலம் பத்திர பதிவு முறையை தாலுகா அலுவலகம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
14.பீகார் அரசு SC/ST மாணவர்கள் முதுகலை வரை இலவசமாக படிக்க வைக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது.
15.மத்திய அரசு பெண்கள் பாதுகாப்பிற்காக Himmat என்ற அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.
16.ஆப்பிரிக்க யூனியனின் புதிய தலைவராக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தேர்வு.
17.2014ம் ஆண்டின் ஞானபீட விருது மராட்டிய எழுத்தாளர் பாலச்சந்திர நமதே வுக்கு வழங்கப்பட்டது.
18. உலகிலேயே முதல் முறையாக விலங்குகளுக்கான விமான முனையம் அமெரிக்காவின் ஜான்.எப்.கென்னடி விமான நிலையத்தில் அமைகிறது.
19.இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முறை ஹைதராபாத்தில் அறிமுகம்.
20. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தூத்துக்குடி துறைமுகம் மத்திய அரசின் விருதை பெற்றது.
- தொடரும்.